

சுங்கை பூலோ, ஜூலை 13-
நாட்டில் உள்ள
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் .
மேலும் அவர்களுக்கு உரிய ஊக்குவிப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் அரசியல் செயலாளர் சுரேஷ் சிங் கேட்டுக் கொண்டார்.
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் 20ஆவது ஆண்டாக தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர்.
இவ்வாண்டுப் போட்டியில் 101 தமிழ்ப்பள்ளி அணிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.
இது பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.
அதே வேளையில் இதுபோன்ற போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
.
இதன் மூலம் அதிகமான இந்திய விளையாட்டாளர்களை நாம் உருவாக்க முடியும்.
இதற்கு அரசாங்க ரீதியில் உதவிகளை பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை அமைச்சரின் வாயிலாக நான் மேற்கொள்வேன் என்று சுரேஷ் சிங் கூறினார்.

