
சென்னை, ஜூலை 13-
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி முடிவுக்கு வந்துள்ளது.
20ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,663 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தமாக அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் 1 லட்சத்து 23,689 ஆகும்.
பாமக வேட்பாளர் அன்புமணி 56,026 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
நாம் தமிழர் கட்சியின் அபிநயா 9,740 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்துள்ளார்.
திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அண்ணா அறிவாலயம், விக்கிரவாண்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களில் அமோக வெற்றி பெற்ற திமுக கூட்டணி இப்போது விக்கிரவாண்டி சட்டமன்றத் இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

