
பெர்லின்: யூரோ கால்பந்து தொடரில் 4ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ஸ்பெயின் சாதனை படைத்துள்ளது.
இன்ற அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களுக்கும் கோல் அடிப்படித்தற்காக கடுமையாக போராடினர்.
2ஆம் பாதி தொடங்கியதும் ஆட்டம் 47வது நிமிடத்தில் ஸ்பெயினின் இளம் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் அற்புதமான கோல் அடித்து அசத்தினார்.
ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் பல்மர் அபாரமாக கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார். இதனையடுத்து ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்பெயின் அணியில் மாற்று வீரராக களமிறங்கிய மைக்கெல் ஆட்டத்தின் 86ஆவது நிமிடத்தின் போது கோல் அடித்தார்.
கடைசி நிமிடங்களில் இங்கிலாந்து அணி வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்தாலும் ஸ்பெயின் வீரர்கள் தங்கள் அதை தடுத்து நிறுத்தி 4ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர்

