கோலாலம்பூர் ஜிஞ்சாங் பாரு தம்பாஹான் ஜிஞ்சாங் செலாத்தான் ஸ்ரீ மகா உத்திர காளீஸ்வரி ஆலயத்தில் மங்கள நவ சண்டி மஹா யாகம் விமர்சையாக நடைபெற்றது

மா. பவளச்செல்வன்

கோலாலம்பூர் ஜூலை 14-
கோலாலம்பூர் ஜிஞ்சாங் பாரு தம்பாஹான் ஜிஞ்சாங் செலாத்தான் ஸ்ரீ மகா உத்திர காளீஸ்வரி ஆலயத்தில் மங்கள நவ சண்டி மஹா யாகம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி ஜூலை 14 ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று தினங்களுக்கு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மூன்று நாட்களில் நடைபெற்ற மங்கள நவ சண்டி மஹா யாகத்தில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.

நேற்று ஜூலை 14 ஆம் தேதி இறுதி நாளில் காலையில் சுக்ல அஷ்டமி திதியும் சித்திரை நட்சத்திரம் சித்த யோகமும் கூடிய சுப தினத்தில் அன்னை ஸ்ரீ உத்திர காளீஸ்வரி அம்மனுக்கு மங்கள நவ சண்டி மஹா யாகம் ஆகம முறைப்படி மிகச் சிறப்பாக நடந்தேறியது.

இந்த மகா யாகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மகா காளி, மகாலட்சுமி, மகா சரஸ்வதி திருவருளை பெற்றனர்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயத்தை உருவாக்கிய அமரர் ரெ. ரங்கநாதன் மற்றும் அமர டத்தோஸ்ரீ ஆறுமுகம் ராஜு அவர்களின் தெய்வ தொண்டினை நினைவு கூறும் வகையில் ஆலய நிர்வாகத்தினர் இந்த பூஜையை சீரும் சிறப்புடன் நடத்தி முடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலய அறங்காவலர் அ. செல்வராஜ், தர்மா கவின்டர், ஆலயத் தலைவர் ஆர். லோகநாதன், பொருளாளர் ஆர்.அண்ணாதுரை, ஆலய இளைஞர் அணி தலைவர் ஜி. கோவிந்தன் ஆகியோர் தலைமையில் இந்த யாகம் சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய விழாவில் பக்தர்களுக்கும் சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles