இலண்டன் கம்பன் விழாவின் இரண்டாவது நாளான இன்று, அதே பரபரப்பு அதே கூட்டம் அதே எதிர்பார்ப்புகளோடு தொடங்கியது அறிவு அறக்கட்டளையின் கம்பன் விழா.

இளைஞர்கள் பேச்சு, பட்டிமன்றம், உலகளாவிய நிலையில் புகழ் பெற்ற பேச்சாளர்களின் உரைகள் என, அரங்கம் கலை கட்டியது. முதல்முறையாக நடைபெற்றாலும். கம்பன் மேல் இருந்த காதலாலும், இலக்கிய தாகத்தாலும், நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்தது.

இரண்டாம் நாளான இன்றும் சிறப்புரையாற்றி கம்பனின் பெருமையையும், கம்பராமாயணத்தின் சிறப்பையும் கூறியதில் மகிழ்ச்சி. கம்பனைத் தொட்டவர்கள் வாழ்வில் மேன்மையும், சிறப்பும் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே கம்பனைக் கற்போம். கம்பராமாயணத்தைப் போற்றுவோம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles