

கோலாலம்பூர் ஜூலை 20-
ஜாலான் ரோப்சன் சைட் புத்ரா ஸ்ரீ சக்தி மகா மாரியம்மன் ஆலயத்தில் புதிய குருக்களாக தமிழ் நாடு சிவகங்கையைச் சேர்ந்த சிவராமன் பொன்னையா பொறுப்பேற்றுள்ளார்.
ஆலயத்தில் தினசரி இவரின் தலைமையில் பூசைகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் வழக்கம் போல ஆலயத்திற்கு வந்து பூசையில் கலந்து கொள்ளலாம் என்று ஆலயத் தலைவர் ராஜா புலேந்திரன் தெரிவித்தார்.
இதனிடையே 50 லட்சம் வெள்ளியில் புதிய ஆலயத்தை எழுப்பும் கட்டுமான பணிகள் மிக விரைவில் தொடங்கும் என்று ஆலயத் துணை தலைவர் மூர்த்தி தெரிவித்தார்.
கட்டடக் குழுத் தலைவர் வழக்கறிஞர் நரசிம்மன் துணை தலைவர் டத்தோ சந்திரகுமணன், ஆலயப் பொருளாளர் டத்தோ மணியரசு, ஆலயச் செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் கட்டட குழு ஆலோசகர் எஸ்.வி.எஸ். வேலு ஆகியோர் திருப்பணிக்கான வேலைகளை செய்து வருகின்றனர்.
118 படிகளுடன் கம்பீரமாக இந்த ஆலயம் பிரம்மாண்டமான முறையில் கட்டப்படவிருப்பதாக அவர் சொன்னார்.

