
சென்னை: ஜூலை 22-
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதை வழிமொழிகிறோம் என்று கூறி அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று அளித்த பேட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் முடிவெடுப்பார்.
என்னுடைய வாழ்க்கையில், 60 ஆண்டுகளாக கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவன்.
என் வளர்ச்சியை விட, என்னுடைய குடும்ப வளர்ச்சியை விட, கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவன். எனவே கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ, அதன்படி நடப்பேன் என்றார்.
அவர் துணை முதல்வராகும் பட்சத்தில் தமிழகத்தில் இன்னும் சிறப்பான ஆட்சியை கொண்டு வர முடியும்.
இதனால் அவர் துணை முதல்வராவதை வழிமொழிகிறோம் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

