
சுங்கைபட்டாணி ஜூலை 22-
இளையோர் கடார காற்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் கெடா மாநில கல்வி இலாகா மற்றும் தலைமையாசிரியர் மன்றத்தின் ஆதரவோடு டான் ஶ்ரீ டத்தோ டாக்டர் கே ஆர்.சோமசுந்தரம் கிண்ண காற்பந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சுழற்கிண்ண அறிமுக விழா போட்டியின் குழுக்கல் இங்குள்ள டான்ஶ்ரீ சோம சுந்தரம் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.
டான்ஶ்ரீ டத்தோ டாக்டர் எஸ்.சோமசுந்தரத்தின் கிண்ண காற்பந்து போட்டி கடந்த 6ஆண்டுகளாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் ஆசிரியர் மன்றமும் இணைந்து இந்த போட்டியினை நடத்த அதன் தலைவர் ஆசிரியர் கார்த்திக்கிடம் கேட்டுக் கொண்டது.
இந்த ஆண்டு அவரின் நல் ஒத்தழைப்பு தந்திருப்பதும் அடுத்த ஆண்டு இன்னும் அதிகமான பள்ளியின் மாணவர்கள் கலந்து இந்த காற்பந்து போட்டி விளையாட்டினை சிறப்பிக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததாக இந்த நிகழ்வின் ஆலோசகர் ப.பிரபா தமது உரையில் தெரிவித்தார்
இந்த நிகழ்விற்கு மஇகா கெடா மாநில துணைத்தலைவர் எஸ்.கே.சுரேஸ்,கெடா மாநில தலைமையாசிரியர் மன்றத் தலைவர் ஆசிரியர் கார்த்திக்கேசு,கெடா மாநில முன்னாள் காற்பந்தாட்டாளர் தனசேகரன் சுப்பையா ,பள்ளியின் தலைமையாசிரியர் கிறிஸ்டிமா, நிகழ்வினை வ்ழி நடத்திய ஆசிரியர் இராமசாமி,கடராம் காற்பந்து தலைவர் என்றி,சுழற்கிண்ணத்தின் ஏற்பாடு குழுத்தலைவர் கணேசன்,தொலதிபர் செல்லையா மற்று பாடாராங் செராய் தொகுதியின் தலைவர் டத்தோ சரவண்ணன் பரசுராமன் ஆகியோர் குழுக்கலில் கலந்து சிறப்பித்தனர்.
இளியோர் கடார காற்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில்
7ஆம் ஆண்டு டான்ஶ்ரீ சோமாசுந்தரம் கிண்ண காற்பந்து போட்டியின் ஆகஸ்ட் 2ஆம் தேதி இங்குள்ள சுங்கை பாசீர் தேசிய வகை ஆரம்பப் மலாய்ப் பள்ளி மற்றும் டான்ஶ்ரீ சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளியில் மைதானத்தில் நடைபெறுகிறது.

