
வாஷிங்டன்: ஜூலை 22-
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி உள்ளார் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க அதிபருமான ஜோ பைடன்.
தேர்தலில் அவருக்கு மாற்றாக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் .
இவரை வீழ்த்துவது எளிது என குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இம்முறை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு தனது முழு ஆதரவை வழங்க விரும்புவதாக போட்டியில் இருந்து விலகிய அதிபர் தெரிவித்தார்.
இது குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப், செய்தி நிறுவனத்திடம் தனது கருத்தை தெரிவித்தார்.
துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் தேர்தலில் வீழ்த்துவது எளிதாக இருக்கும் என தான் கருதுவதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

