அத்துமீறி செல்லும் இணைய மிரட்டலை அம்சங்களைத் தொடர்ந்து சமூக ஊடக தளங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை! அமைச்சர் பாமி பட்சில் எச்சரிக்கை

கோலாலம்பூர் ஜூலை 22-
எல்லை மீறிய அளவில் இணைய மிரட்டல் அம்சங்களை தொடர்ந்து பல சமூக ஊடகங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் எச்சரித்தார்.

இந்த நாட்டில் சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள், மோசடிகள், இணைய அச்சுறுத்தல்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மலேசிய தகவல், தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் தலைவர்டான்ஶ்ரீ முகமட் சலிம் பாத்தே டின் இதற்கான நடவடிக்கை துரிதப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சமூக ஊடகங்கள் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து சிலர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களின் வாயிலாக போலிச் செய்திகள், மோசடிகள் மக்களைத் துன்புறுத்துகிறது.

சமீப காலமாக, சிலர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு இணையப் பகடிவதைகள் அதிகரித்து விட்டது.

ஆகவே டான்ஶ்ரீ அவர்களே ….
இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles