எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகம் பட்டுப்போய் இருந்தது: அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகம் பட்டுப்போய் இருந்தது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத இடங்களை புதிய திட்டங்களுக்கு செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகத்தில் தரமான உணவு கிடைக்கவில்லை.

அது கெட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் அதைக் கையில் எடுத்ததற்கு பழனிசாமி வரவேற்றிருக்க வேண்டும், பாராட்டி இருக்க வேண்டும்
.

வஞ்சக எண்ணத்தோடு குறுகிய புத்தியோடு அதை விமர்சனம் செய்வதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

எதிரியாக இருந்தாலும் துரோகியாக இருந்தாலும் கருணை உள்ளம் கொண்டு ஏற்றுக்கொள்ளக்கூடியவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles