மடானி அரசாங்கம் மூலமாக கிடைக்கப்பெறும் உதவிகள் குறித்து பொதுமக்களுடன் சந்திப்புக் கூட்டம்!

சுங்கைபட்டாணி ஜூலை 22-
மடானி அரசாங்கத்தின் மூலமாக மக்களுக்கு கிடைக்கக் கூடிய உதவித் திட்டங்கள் குறித்து இங்குள்ள தாமான் ரியா ஜெயா பகுதியில் வசிக்கும் பொதுமக்களுடன் சந்திப்புக் கூட்டம் இங்குள்ள கெஅடிலான் கட்சியின் மெர்போக் கிளை ஏற்பாடு செய்திருந்தது.

மடானி அரசாங்கம் எந்த விதமான உதவித் திடங்கள் மற்றும் எஸ் பிஎம் தேர்வில் தொடர்ந்து தங்களது கல்வியினை தொடரவிருப்பது குறித்தும் இந்த விளக்கக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதோடு அமானா இக்தியார மலேசியா எனும் பெண் திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

முன்பு இந்த திட்டம் மலாய்க்காரர்களுக்கு மட்டுமே இருந்தது எனவும் இப்போது இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக முன்னாள் புக்கிட் செலம்பாவ் சட்டமன்ற உறுப்பினர் வி.ஆறுமுகம் தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் பங்கு கொள்பவர்களுக்கு வங்கி கணக்கு,வியாபாரா உரிமம் போன்றவைகையில் எதுவும் தேவையில்லை எனவும் 5பேர் சேர்ந்து ஒரு வியாபார திட்டத்த்தை அமைத்து அவர்கள் செய்யக்கூடிய வியாபாரத்திற்கு ஏற்றவாறு ஆயிரம் ரிங்கிட் மலேசிய முதல் மூவாயிரம் வெள்ளி வரையில் உதவித் தொகையினை வழங்க விருப்பதாக குறித்தும் இந்த மக்களுடன் சந்திப்பு நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

அதுபோல டீசல் உதவித் தொகை குறித்தும் இன்னும் பல வித கிடைக்கப்பெறும் உதவித் தொகையில் குறித்தும் இது விளக்கம் பட்டது.

நலனவிவிருத்தி இலாகாவில் மூலமாக உதவித் தொகையினை கிடைக்காமல் இருப்பவர்கள் தங்களோடு தொடர்புக் கொண்டு உதவித் தொகையினை கிடைக்காமல் இருப்பவர்கள் குறித்தற்காக சந்திப்புக் கூட்டத்தை விரைவில் ஏற்பாடு செய்யவிருப்பதாக இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் முக்கியமானவரான கோவிந்தராஜூ தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு தொலதிபர் சிங்கப்பூர் சின்னையா,கெஅடிலான் கட்சியின் இராஜாரா சுப்பிரமணியம் பெரும் அளவில் தங்களது ஆதரவை வழங்கி உள்ளனர்.

முன்னாள் ஆசிரியர் பயிற்சி கழக உரிமையாளர் முனைவர் சச்சிதானந்தன் கிருஷ்ணமூர்த்தி ஆசிரியர் கதிரவன் ஆகியோர் மக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

ஓம் உத்தரா உரிமையாளரும் கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த நகுலன் கண்ணன் இந்த விளக்க உரை கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles