
கோம்பாக்: ஜூலை 22-
என் மகள் ஈஷாவின் இணையப் பகடிவதை வழக்கை ஒரு சிலர் திசை திருப்ப முயற்சித்து வருகின்றனர் என்று அவரின் தாயார் ஆர். புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார்.
இணையப் பகடிவதைக்கு இலக்கான ஈஷா எனப்படும் ராஜேஸ்வரி கடந்த ஜூலை 5ஆம் தேதி தற்கொலை செய்துக் கொண்டார்.
குறிப்பாக இணையப் பகடிவதையால் பாதிக்கப்பட்டது தொடர்பில் ஈஷா போலிசில் புகார் செய்திருந்தார்.
அதன் பின் தான் அவர் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் சில தரப்பினர் நேர்மையற்ற கூற்றுக்கள் மூலம் தனது மகளின் வழக்கிலிருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.
நாட்டிற்கு வெளியில் உள்ள உள்ளவர்களுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டி, அவரை சிலர் மோசமான சாயம் பூச முயற்சிப்பதாகக புஷ்பா கூறினார்.
சமீபத்தில், ஈஷாவை தப்பியோடிய நபருடன் தொடர்புபடுத்தும் ஒரு சமூக ஊடக பதிவை நான் கவனித்தேன்.
அந்த பதிவு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவும், சிக்கலைத் திசைதிருப்பவும் இருந்தது என்பது வெளிப்படையானது.
இதில் ஏதோ ஒரு அரசியல் இருக்கிறது என தாம் சந்தேகப்படுகிறேன்.
ஈஷாவின் 16ஆவது நாள் பிரார்த்தனையை முடித்துக் கொண்ட பின் தாயார் புஷ்பா செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

