ஜோ பைடன் விலகியதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிசுக்கு ஆதரவு குவிகிறது

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து அதிபர் ஜோ பைடன் விலகியதைத் தொடர்ந்து ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளராக துணை அதிபரும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிசுக்கு ஆதரவுகள் குவிகின்றன. இந்திய அமெரிக்கர்களும் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

கடந்த 2021 முதல் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகவும், முதல் இந்திய வம்சாவளி துணை அதிபராகவும் கமலா ஹாரிஸ் பதவி வகித்து வருகிறார்.

ஏற்கனவே இவரைத்தான் ஜனநாயக கட்சி வேட்பாளராக நிறுத்த வேண்டுமென பலரும் கூறி வந்த நிலையில் தற்போது கமலா ஹாரிசுக்கு ஆதரவுகள் குவிகின்றன.

முக்கியமாக முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், அவரது மனைவியும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தல் வேட்பாளராக போட்டியிடுவதை அமெரிக்க இந்தியர்களும் வரவேற்றுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles