
நிதிநிலை பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
2024-2025ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகின.
இந்நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, “மோடி அரசு பதவி நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் வகையிலேயே பட்ஜெய் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சாதாரண குடிமக்களுக்கு பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. அம்பானி, அதானிக்கு பயனளிக்கும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. பெரு முதலாளிகளை குஷிப்படுத்தியும், சாமானிய மக்களுக்கு எத்தகைய நிவாரணமும் வழங்காத பட்ஜெட்,” என்றார்.

