
ஈப்போ ஜூலை 24-
டத்தோ டாக்டர் லோக பாலா மோகன் தலைமையில் செயல்படும் Myppp( மைபிபிபி) கட்சி இது வரை தேசிய முன்னணி கட்சியை ஆதரித்து வருகிறது.
எங்களின் நிலைபாடு குறித்து தேசிய முன்னணியின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளோம் ..
இருந்தபோதும் இது குறித்து எந்த பதிலும் தேசிய முன்னணியிடம் இருந்து வரவில்லை , அதன் பதிலுக்காக காத்துள்ளோம்.
வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதிக்குள. எந்த பதிலும் வரவில்லை என்றால். செப்டம்பர் மாதம் முதல் தேசியன்று கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் Myppp( மைபிபிபி) கட்சியின் தேசிய மாநாட்டில் அதன் நிலை பாடு குறித்து முடிவினை பேராளர்கள எடுப்பார்கள் என்று டத்தோ டாக்டர் லோக பாலா மோகன் கூறினார்.
நேற்று தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள மைபிபிபி கட்சியின் தொகுதி அலுவலகத்தில் கட்சி பொறுப்பாளர்கள் சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்..
பல இனம் கொண்ட மைபிபிபி கட்சியில் தற்பொழது 3,20,000 உறுப்பிர்கள் அங்கம் வகித்து வருகிறர்கள்.
.
கட்சியை மேலும் வலுசேர்க்க உறுப்பினர்கள் சேரக்கப்பட்டு வருகிறது.
இங்கு நடைபெற்ற சந்திப்புக கூட்டத்தில் லுமுட் தொகுதியில் இருந்து 250 உறுப்பினர்கள் சேர்க்கபட்ட பாரத்தை தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட தகவலையம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாநில மைபிபிபி கட்சியின் பேரா மாநிலத் தலைவராக டத்தோ லி யேங் மற்றும் மாநில செயலாளராக என்.விஜய்சந்திரன் ஆகிய இருவரையும் நியமனம் செய்துள்ளதாக டத்தோ டாக்டர் லோக பாலா மோகன் அறிவித்தார்.

