மாணவர்களுக்கு மின் சிகிரெட்டுகள் விற்பதைத் தடுக்கும் பரிந்துரை அரசிடம் சமர்ப்பிக்கப்படும்- பாப்பாராய்டு

ஷா ஆலம், ஆக 5- மாணவர்கள் மத்தியில் மின் சிகரெட் (வேப்) விற்பனையை கட்டுப்படுத்தும் பரிந்துரை மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் கொண்டு வரப்படும்.

திரங்கானுவில் நான்காம் படிவ மாணவர் ஒருவர் மின் சிகிரெட் புகைத்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த பரிந்துரை முன்வைக்கப்படவுள்ளதாக மனிதவளத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாபாபாராய்டு கூறினார்.

அனைத்து அரசுத் துறைகள், ஊராட்சி அமைப்புகள் மற்றும் அமலாக்கத் துறைகள் மின்சிகிரெட்டுகளை மாணவர்களுக்கு விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. மின் சிகிரெட் புகைப்பதால் மாணவர்களுக்கு எந்தப் பயனும் தராது என்பதோடு அவர்களின் கற்றல் நடவடிக்கைக்கும் உதவாது என அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles