சிவராஜ் உட்பட கட்சிக்கு மீண்டும் திரும்புபவர்களை மஇகா ஏற்றுக் கொள்ளத் தயார்!


செனட்டர் டத்தோ சிவராஜ் உட்பட கட்சிக்கு மீண்டும் திரும்புபவர்களை மஇகா ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளது. இதில் எந்த பாகுபாடும் பார்க்கப்படாது என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

மஇகா மேலும் வலுப்பெற வேண்டும். புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைய வேண்டும். இதுதான் கட்சியின் முதன்மை இலக்கு.
இதன் அடிப்படையில் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் தற்போது வெளியே உள்ளனர்.

அவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்ப விரும்பினால் அவர்களை கட்சி தாராளமாக ஏற்றுக் கொள்ளும்.இதில் செனட்டர் டத்தோ சிவராஜ்ஜும் அடங்குவார்.

தற்போது பூச்சோங்கைச் சேர்ந்த அவுத்தார் சிங் தாம் செய்த தவற்றுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இதனால் அவர் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்த நடைமுறை அனைவருக்கும் பொருந்தும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles