
மா.பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஆக 21-
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும், தர்மபுரி பச்சமுத்து கல்விக் குழுமமும் இணைந்து நடத்திய தமிழ்க்கல்விக் கருத்தரங்கு தலைநகர் சோமா அரங்கில் நடைப்பெற்றது.
ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய டத்தோ ஸ்ரீ சரவணன் ஒரு சமுதாயத்தை மாற்றி அமைக்கும் சக்தி ஆசிரியர்களிடம் உண்டு என்றார்.
அதிலும் குறிப்பாக தமிழ்நாடு பச்சமுத்து கல்விக் குழுமத் தலைவர் முனைவர் பச்சமுத்து பாஸ்கர் அவர்களின் கல்விப் பணியைக் கண்டு வியந்து போனேன் என்றார்.
கல்வி என்பது விதைப்பது. எதை விதைக்கிறோமோ அது பல மடங்கு வளர்ச்சியைத் தரும் நம் பூமியை போல். அதனால் தான் ஆசிரியர்கள் நிலம் ,மலை, பூ வோடு ஒப்பிட்டு முன்னோர்கள் போற்றியுள்ளனர் என்றார் டத்தோ ஸ்ரீ சரவணன்.
அந்த வகையில் முனைவர் பச்சமுத்து தொடக்கப் பள்ளி தொடங்கி பல கல்லூரிகள் நடத்துவதோடு, கல்வி எட்டாக் கனியாக இருக்கும் 500க்கும் மேற்பட்டவர்களைப் பட்டதாரியாக்கி உள்ளார் என்பது பாராட்டத்தக்கது.
அவரின் இக்கல்வி பணி தொடர வேண்டும், ஆசிரியர்களும் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும்.
அதன் வழி பல புதிய அனுபவம் ,கல்வி , எண்ணங்கள் ஆசிரியர்களுக்கு தோன்றும் என்றார் டத்தோ ஸ்ரீ சரவணன்
இந்த கருதரங்கில் முனைவர் பச்சமுத்துவிற்கு கல்விச் செம்மல் என்ற விருது மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கியது.
இந்த விருதை டத்தோ ஸ்ரீ எம். சரவணன் முனைவர் பச்சமுத்துவிற்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கருத்தரங்கில் தமிழ் நாட்டில் இருந்த 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் ,
சுபாங் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.
இப்படிபட்ட கருத்தரங்கில் வருங்காலங்களில் பள்ளி மாணவர்கள் அதிகம் பங்கு கொள்ள வேண்டும் என டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தினார்.

