
கோலாலம்பூர்: செப் 11-
வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நையாண்டி செய்த HOT FM வானொலிக்கும் கைரி ஜமாலுடினுக்கும் கடும் கண்டனம் வலுத்து வருகிறது.
முன்னாள் அமைச்சருமான நடப்பு வானொலி அறிவிப்பாளரான கைரி ஜமாலுடின் நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை கிண்டல் செய்ததாக காணொலி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக HOT FM வானொலியைப் புறக்கணிக்குமாறு நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
MEDIA PRIMA BERHAD க்கு சொந்தமான இந்த வானொலியான HOT FM இவ்வாறு நடந்து கொண்டிருப்பது தொடர்பில் வானொலி தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் இல்லை என்று கூறப்படுகிறது.

