
கோலாலம்பூர் செப் 13-
ஒவ்வொரு ஆண்டும் சீனர்கள் தங்லோங் எனப்படும் வண்ண விளக்கு விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இவ்வாண்டும் தங்லோங் பெருநாளை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் ருக்குன் தெத்தாங்கா ஏற்பாட்டில் இன்று தங்லோங் விளக்குகள் இலவசமாக வழங்கப்பட்டது.
பிரிக்பீல்ட்ஸ் ருக்குன் தெத்தாங்கா தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான ஸ்டார் மணியம் தலைமையில் ருக்குன் தெத்தாங்கா பொறுப்பாளர்கள் இன்று உற்சாகத்துடன் தங்லோங் விளக்குகளை சீனர்களுக்கு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

