பகாங் சுல்தானின் பிறந்தநாளை முன்னிட்டு டத்தோஶ்ரீ விருது பெற்றார் டத்தோ இரமணன்!

பெக்கான்: செப் 13-
மேன்மை தங்கிய பகாங் சுல்தான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு துணையமைச்சர் டத்தோ இரமணனுக்கு டத்தோஶ்ரீ எனும் உயரிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

பகாங் சுல்தான் அல் சுல்தான் அப்துல்லாஹ் ரியாதுதீனின் பில்லா ஷாவின் 65ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சிறப்பு முக்கிய பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ இரமணனுக்கு டத்தோஶ்ரீ விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டத்தோஶ்ரீ விருதுப் பெற்ற அவருக்கு வாழ்த்துகள் குவித்த வண்ண உள்ளது.

தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துணையமைச்சராக பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் பல திட்டங்களை டத்தோஶ்ரீ இரமணன் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles