சுங்கை பட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் ‘முருகன் பாமாலை’ நிகழ்வு பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

சுங்கைபட்டாணி ஏப் 31-

தமிழ் கடவுளான முருகப் பெருமானின் ‘முருகன் பாமாலை’ எனு ம் பக்தி பரவச நிகழ்வு இங்குள்ள ‘ஸப்த நாத லயாஸ் நுண்கலை’ மைய உரிமையாளரும் கர்நாடக சங்கீத ஆசிரியருமான ஞான சரஸ்வதி தேவி ஸ்ரீமதி லீலாதேவி சரவணகுமார் அவர்களின் தலைமையில் 21 சங்கீத மாணவர்களுடன் கடந்த 25ஆம் தேதி இனிதே நடைபெற்றது.

முருகப்பெருமானின் மகிமையைப் புகழ்ந்து பாடும் இந்நிகழ்ச்சி, இவ்வாலயத்தில் முதன்முறையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது என்றார் அவர்..
மொத்தம் 15 பாடல்கள் கொண்ட இந்த முருகன் பாமாலை, சங்கீத மாணவர்களின் கலைஞானத்தை பெருக்குவதற்கும் அவர்களுக்கு அனுபவத்தைத் தருவதற்கும் ஒரு நல்ல முயற்சியாக அமைந்தது.

பக்தர்கள் முன்னிலையில் படைக்கப்பட்ட இந்த முருகன் புகழ் பாமாலை முருகனின் அருளைக் கண்டிப்பாக அனைவருக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது என்பதை நிச்சயமாய் உணர்வதாகவும் தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பினை பெரும்பாக்கியமாகக் கருதுவதாகவும் சங்கீத ஆசிரியை ஸ்ரீமதி லீலாதேவி சரவணகுமார் மனம் நெகிழக் குறிப்பிட்டார்.மேலும், இவ்வேளையில் இந்த நிகழ்ச்சியினை இனிதே நடத்த அனுமதி கொடுத்த ஆலயத் தலைவர் திரு இராஜேந்திரன் அவர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளை மேலும் நடத்தும்படி பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து ஆசிரியரின் நுண்கலை மையத்தைப் வெகுவாகப் பாராட்டினர்.

சுங்கைப் பட்டாணி வட்டாரத்தில் பல இடங்களில் முக்கியமாகச் சுப்பிரமணிய தேவஸ்தானத்தில் கர்நாடக சங்கீத வகுப்பு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 16 ஆண்டு காலமாக கர்நாடக சங்கீதத் துறையில் ஆசிரியராகச் சேவையாற்றி வரும் ஸ்ரீமதி லீலாதேவி சரவணகுமார் அவர்களிடம் இக்கலையைப் பயில ஆர்வமுள்ளோர் 0124566850 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles