புக்கிட் காசிங் தொகுதியில் 400 பேருக்கு தீபாவளி பற்றுச் சீட்டுகள் விநியோகம்!

பெட்டாலிங் ஜெயா, அக். 21- தீபாவளியை முன்னிட்டு புக்கிட் காசிங் தொகுதியைச் சேர்ந்த 400 குடும்பங்களுக்கு தலா 200 வெள்ளி மதிப்புள்ள ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன.

இங்குள்ள பிஜேஎஸ்2 மாத்தாஹாரி பேரங்காடியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் பற்றுச் சீட்டுகளை ஒப்படைத்தார்.

இந்த பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தி பேரங்காடியில் தீபாவளிக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை அவர்கள் வாங்கிக் கொண்டனர்.

தீபாவளியைக் கொண்டாடுவதில் வசதி குறைந்தவர்கள் எதிர்நோக்கும் பொருளாதாரச் சுமையை இந்த ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுத் திட்டம் ஓரளவு குறைக்கும் எனத் தாம் நம்புவதாக ராஜீவ் கூறினார்.

தீபாவளிக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு இந்த நிதியுதவி தங்களுக்கு பெரிதும் துணை புரிந்ததாக பற்றுச் சீட்டுகளைப் பெற்றவர்கள் கூறினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles