பேரா மாநில சமுக நல சமுதாய நேர்மை இயத்தின் உதவிகள்

ஈப்போ அக் 21-
தீபாவளி தினத்தையொட்டி, பேராக் மாநில சமூக நல சமுதாய நேர்மை இயக்கம் வசதி குறைந்த குடும்பங்களுக்கு சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கியது.

குழந்தைகளுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டதாக
குழந்தைகள் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தீபாவளிப் பணம் வழங்கப்பட்டுள்ளது என்று அச்சங்கத்தின் தலைவர் சரஸ்வதி ஆறுமுகம் கூறினார்

தெலுக் இந்தான் , சுங்கை சிப்புட் மற்றும் ஈப்போவில் உள்ள வசதி குடும்பங்கள அடையாளம் கண்டு இந்த உதவிகள் வரங்கியதாக அவர குறிப்பிட்டார்.

இந்த சேவையை தமது இயக்கம் ஆண்டு தோறும் வழங்குவதாக தெரிவித்த அவர் பெருநாள் காலங்களில மட்டும் இந்த சேவை வழங்கவில்லை மாறாக தேவையை எதிர்நோக்கும் மக்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்

இந்த உதவி அவர்களின் குடும்பத்தின் செலவுகளின் சுமையை சிறிது குறைக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles