கேடிஎம்பி 2025 ஜனவரி 1 முதல் முழு பணமற்ற சேவை முறையை தொடங்கும்!

கோலாலம்பூர், நவ 2 – மலேசியா இரயில் சேவையான கெராத்தா அப்பி தானா மெலாயு பெர்ஹாட் (கேடிஎம்பி) ஜனவரி 1,2025 முதல் கிள்ளான் பள்ளத்தாக்கு, வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளுக்கு முழு பணமில்லா டிக்கெட் கொள்முதல் முறையை செயல்படுத்தும்.

உள்ளடக்கம், பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத் தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் டிஜிட்டல் மயமாக்கலுக்கான அரசாங்கத்தின் அபிலாஷைகளுடன் ஒத்து, மிகவும் திறமையான மற்றும் போட்டி நிறைந்த சமூகத்தை வளர்ப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கேடிஎம் பி தெரிவித்துள்ளது.

பணமில்லா சமூகத்திற்கு மாறுவது உட்பட, மலேசியாவை ஒரு போட்டி டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றுவதற்கான தேசிய தலைமையின் முயற்சிகளையும் இந்த நடவடிக்கை ஆதரிக்கிறது.

கேடிஎம்பி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ முகமது ராணி ஹிஷாம் சம்சுதீன் விளக்கினார்,

நிறுவனம் தற்போது இந்த ஆண்டு இறுதி வரை, பொதுமக்களிடையே, குறிப்பாக முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர் களிடையே, பணமில்லா கொடுப்பனவுகளுக்கு மாறுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான மாற்ற கட்டத்தில் உள்ளது.

“இந்த மாற்றக் காலத்தில், டிக்கெட் கவுண்டர்கள் தொடர்ந்து பணப் பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்ளும்.

இருப்பினும், இந்த முயற்சி செயல்படுத்தப் பட்டவுடன், அனைத்து பரிவர்த்தனைகளும் பணமில்லாத டிக்கெட் முறையாக இருக்கும் “என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles