
புத்ரா ஜெயா, நவ 7-
உலகமே பெரும் ஆவலோடு ஏதிர்பார்த்த
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் வெற்றி பெற்றுள்ளார்..
இவ்வேளையில்
டொனாடிரம்பிற்கு மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்த புதிய அத்தியாயம் புதுப்பிக்கப்பட்ட வாய்ப்புகளைத் தருகிறது.
நம்பிக்கை, ஒத்துழைப்பு, பொதுவான நோக்கத்துடன் முன்னேற மலேசியா தயாராக உள்ளது.
மேலும் அமெரிக்கா மலேசியாவின் மிகப் பெரிய வெளிநாட்டு முதலீட்டு ஆதாரமாகவும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஒரு முக்கிய பங்காளராகவும் உள்ளது.
அடுத்த ஆண்டு ஆசியான் தலைவர் என்ற முறையில், தென்கிழக்கு ஆசியாவுடனான தனது ஈடுபாட்டை அமெரிக்கா புதுப்பிக்க முடியும் என மலேசியா நம்புகிறது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மேலும் பாலஸ்தீனம், உக்ரைனில் நடைபெற்று வரும் வன்முறை, பயங்கரமான உயிர் இழப்புகளைத் தடுக்க அமெரிக்கா தனது பெரும் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என மலேசிய நம்புகிறது என்றார் அவர்.
பெர்னாமா

