

கோலாலம்பூர், நவ 10-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பண்டார் துன் ரசாக்கில் இன்று தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
Institut Latihan DBKL (IDB) என்ற இடத்தில் காலை 10.30 முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும் இந்த தீபாவளி விருந்து உபசரிப்பில் பிரதமரின் அரசியல் செயலாளர் மற்றும் விலாயா மாநில கெஅடிலான் தலைவர் டத்தோ அஸ்மான்,பண்டார் துன் ரசாக் கெஅடிலான் உதவித் தலைவர் ஜோனதன் வேலா தலைமை தாங்கினர்.
விலாயா மாநில கெஅடிலான் துணை தலைவர் ஜெயக்குமார், லெம்பா பந்தாய் கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் பக்தவச்சலம், லெம்பா பந்தாய் கெஅடிலான் மகளிர் அணி தலைவி ஷினா, செபூத்தோ தொகுதி கெஅடிலான் தலைவர் அனிதா மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், காஜாங் வட்டார சமூக சேவகி டாக்டர் தமிழ்ச் செல்வி ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.

அனைத்து இனங்களையும் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பொது உபசரிப்பில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக ஜோனதன் வேலா தெரிவித்தார்.
சுற்று வட்டார மக்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

