முன்னாள் நிதி அமைச்சர் துன் டாய்ம் ஜைனுடின் காலமானார்!

கோலாலம்பூர் நவ 13-
நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுடின் இன்று காலமானார் என்று அவரின் வழக்கறிஞர் குர்டியால் சிங் நிஜார் உறுதிப்படுத்தினார்.

86 வயதுடைய துன் டாய்ம் உடல் நலக்குறைவால் பெட்டாலிங்ஜெயா அசுந்தா மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பயனின்றி அவர் இன்று மரணமடைந்தார்.

துன் டாய்ம் ஜைனுடின் கடந்த 1984ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை நிதி அமைச்சராகவும் 1999 முதல் 2001ஆம் ஆண்டு வரை இரண்டாவது துணையமைச்சராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles