
கோலாலம்பூர்: நவ 13-
இந்திய தொழில் முனைவர்களின் மேம்பாட்டிற்காக தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சு 13 கோடியே 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது என்று
துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நேற்று மக்களவையில் தெரிவித்தார்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சு இந்திய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் தொடர்ச்சியான முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக அமைச்சின் கீழ் 13 கோடியே 60 லட்சம் வெள்ளியை சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய சமூகத்திற்குள் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்தவும் ஆதரிக்கவும் இத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
அமானா இக்தியாரின் பெண் திட்டத்தின் கீழ் 50 மில்லியன் ரிங்கிட், பேங்க் ரக்யாட் ஐ-பிரிவ் திட்டத்தின் கீழ் 50 மில்லியன், ஐ-பேப் திட்டத்தின் கீழ் 6 மில்லியன் ரிங்கிட், ஸ்பூமி கோஸ் பிக் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

