ஊழல் வழக்கில் ஈடுபடும் யாரையும் பிரதமர் பதவியை பயன்படுத்தி தற்காக்க மாட்டேன்! டத்தோஸ்ரீ அன்வார் உறுதி

புத்ரா ஜெயா, நவ 13-
ஊழல் வழக்கில் ஈடுப்படும் யாரையும் தற்காக்க பிரதமர் பதவியைப் பயன்படுத்த மாட்டேன் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும், ஒரு திட்டத்திற்கு ஒப்புதழ் வழங்க பணம் கேட்ட எட்டு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் உட்பட அனைத்து வழக்குகளையும் முழுமையான விசாரணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி மேற்கொள்ளும் என்றார் அவர்.

ஊழல் வழக்கில் ஈடுப்படுவது யாராக இருந்தாலும் அவர்களைத் தற்காக்க மாட்டேன் என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

பிரதமர் பதவியை ஊழல் வழக்குகளில் ஈடுபடுவர்களைத் தற்காக பயன்படுத்த மாட்டேன் என்று அதற்கு ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறினார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles