புக்கிட் காசிங் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பில் 1,500 பேர் பங்கேற்பு!

பெட்டாலிங் ஜெயா, நவ. 13 – புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி
நிலையிலான தீபாவளி பொது உபசரிப்பு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி
சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயா, லாமான் எம்.பி.பி.ஜே. வளாகத்தில்
வெகு சிறப்பாக நடைபெற்றது.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜீவ் ஏற்பாட்டில் இரவு 7.00 மணி
தொடங்கி 10.00 மணி வரை மிகச்சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த
பொது உபரிப்பில் பல்லினங்களையும் சேர்ந்த சுமார் 1,500 பேர் கலந்து
சிறப்பித்தனர்.

இந்த தீபாவளி பொது உபசரிப்பில் அறுசுவை விருந்துபசரிப்போடு இந்திய
பாரம்பரியக் கலையான பரதம் உள்ளிட்ட நடனங்களும் ஆடல், பாடல்
நிகழ்வுகளும் இடம் பெற்றன.

இந்த பொது உபசரிப்பில் தோசை சுடும் அங்கம் பிரத்தியேக நிகழ்வாக
இடம் பெற்றது

ராஜீவ் தோசை சுடுவதில் தமக்குள்ள திறமையைக் காட்டி
விருந்தினர்களுக்கு அந்த உணவை பரிமாறினார்.

இந்த பொது உபசரிப்பில் பல்லின மக்களும் திரளாகக் கலந்து கொண்டது
குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ராஜீவ், பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில்
ஒற்றுமை உணர்வை தொடர்ந்து மேலோங்கச் செய்வதில் இத்தகைய
விழாக்கள் பெரிதும் துணை புரிகின்றன என்றார்.

இந்த பொது உபசரிப்பு நிகழ்வு சிறப்புடன் நடைபெறுவதில் துணை புரிந்த
அனைத்து தரப்பினருக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர்
குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles