பரபரப்பான சண்டையில் புள்ளிக கணக்கில் தோல்வி கண்டார் மைக் டைசன்!

டெக்சாஸ், நவ 16-
உலகமே மிகவும் எதிர்பார்த்த உலக குத்துச்சண்டை போட்டியில் இரும்பு மனிதன் டைசன் 79-73 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தார்.

புகழ்பெற்ற அமெரிக்க குத்துச் சண்டை வீரரான மைக் டைசனுக்கு வயது 58. இந்த வயதில் 27 வயதான ஜேக் பால் என்பவருடன் இன்று குத்துச்சண்டைக் களத்துக்குள் குதித்துவிட்டார்.

டைசன் கடைசியாகப் போட்டியிட்டது 2005-இல். அந்த கடைசி போட்டியில் கெவின் மெக் ப்ரைட் என்பவரிடம் தோற்றதுடன் அவர் ஓய்வு பெற்றிருந்தார்.

50 வெற்றிகள் 6 தோல்விகள் என்ற சாதனை சரித்திரத்துக்கு சொந்தக்காரர் டைசன். அத்துடன் அதில் 44 நாக் அவுட்கள் செய்தவர்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாசில் இன்று நடந்த இப்போட்டி எட்டு சுற்றுகளைக் கொண்டது.

ஒவ்வொரு சுற்றும் இரண்டு நிமிடம். எட்டு சுற்றுகள் கொண்ட விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 79-73 என்ற புள்ளிக்கணக்கில் டைசன் தோல்வியைத் தழுவினார்.

வெற்றி பெற்ற ஜேக் பாலுக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களும் தோல்வி அடைந்த மைக் டைசனுக்கு 20 மில்லியன் டாலர்களும் கிடைக்கும்.

இந்த போட்டி நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடி யாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

போட்டியில் வென்ற ஜேக் பால் டைசனைக் கட்டித் தழுவி உணர்ச்சி வயப்பட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles