
சென்னை நவ 18-
வரும் 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அதிமுக கட்சியுடன் கூட்டணி அமைத்து கொள்ளும் என்ற செய்திக்கு தமிழக வெற்றி கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் -தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் தலைவர் விஜய் தமது உரையில் விளக்கமாக அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு தமிழக வெற்றி கழகம் தேர்தலை சந்திக்கும் என்று தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
அந்த வகையில் அதிமுகவுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்று நாளிதழ்களில் வெளிவரும் செய்தி உண்மைக்கு புறம்பானவை என்றார் அவர்.

