பந்திங் தொகுதியின் தீபாவளி உபசரிப்பில் எஸ்.பி.எம். மாணவர்களுக்கு தமிழ் வழிகாட்டி புத்தகங்கள் அன்பளிப்பு!

பந்திங் நவ. 18 – பந்திங் சட்டமன்றத் தொகுதி நிலையிலான தீபாவளி
பொது உபசரிப்பு நிகழ்வு நேற்று நவம்பர் 17ஆம் தேதி பந்திங், காலியான்
பிளாசாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பந்திங் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதவளம் மற்றும் வறுமை
ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.பாப்பா ராய்டுவின்
சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த உபசரிப்பில் மூவனங்களையும்
சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த பொது உபசரிப்பின் சிறப்பு அங்கமாக கல்வித் துறையில் அனுபவம்
வாய்ந்த விக்னேஸ்வரி சாம்பசிவம் அவர்களால் உருவாக்கப்பட்ட
எஸ்.பி.எம். தேர்வுக்கான தமிழ்மொழி வழிகாட்டிப் புத்தகங்கள்
மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

கோல லங்காட் மாவட்டத்திலுள்ள இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் 197
மாணவர்கள் இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் மொழியை பாடமாக
எடுக்கின்றனர்.

இம்மாணவர்களுக்கு தமிழ் மொழியைப் போதிக்கும் 11
ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 211 பேருக்கு இந்த வழிகாட்டி புத்தகங்கள்
பாப்பாராய்டு ஏற்பாட்டில் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்த வழிகாட்டிப் புத்தகங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள்,
மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் பாப்பாராய்டு இந்நிகழ்வின் போது
நேடியாக ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles