
பட்டர்வொர்த், டிசம்பர் 8 – சமீபத்தில் ஒன்பது மாநிலங்களைத் தாக்கிய முதல் அலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை கல்வி அமைச்சு (எம். ஓ. இ) அடையாளம் கண்டுள்ளது.
இப்போது சேதங்களின் செலவு மதிப்பீடு செய்து வருவதாக அதன் அமைச்சர் அமைச்சர் ஃபாட்லினா சிடெக் தெரிவித்தார்.
“முதல் அலைக்கான எணிக்கை எங்களிடம் உள்ளன, மேலும் சம்பந்தப்பட்ட சேதங்களின் செலவுகளை மதிப்பிடுகிறோம்.மற்ற சாத்தியமான சூழ்நிலைகளுக்கும் நாங்கள் தயாராகி வருகிறோம், “என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
வெள்ளத்தால் சேதமடைந்த பள்ளிகளை பழுதுபார்ப்பதற்கு உடனடி உதவிகளை வழங்க நிதி அமைச்சகம் (எம்ஓஎஃப்) எம்ஓஇ உடன் ஒத்துழைக்கும் என்று நிதியமைச்சர் II டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்ஸா அஜீசன் நேற்று தெரிவித்தார்.
இதனால் அவர்கள் விரைவில் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க முடியும்.
எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது அலை வெள்ளத்தின் போது திட்டமிடப்பட்ட சிஜில் பிலஜாரன் மலேசியா தேர்வுக்கான அறிவியல் நடைமுறை சோதனைகளை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக ஓப்ஸ் பாயுங்கை செயல் படுத்துவது உட்பட, இதுவரை எம். ஓ. இ மேற்கொண்ட ஏற்பாடுகள் குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.
பெர்னாமா

