
காளிதாஸ் சுப்ரமணியம்
பெட்டாலிங் ஜெயா,டிச 9-
தேசம் ஊடகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான விருதளிப்பு விழா வரும் டிசம்பர் 13 ஆம் தேதி மாஹ்ஸா பல்கலைக்கழகத்தில் மிகவும் விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
தேசம் ஊடகத்தின் 7ஆம் ஆண்டு விருதளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் முறையே செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 60 பேருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ள வேளையில் மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது என்று தேசம் ஊடகத்தின் உரிமையாளர் குணாளன் மணியம் தெரிவித்தார்.
தேசம் ஊடகம் தொடங்கி 15 ஆண்டு நிறைவடைகிறது. தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிப்பதையே தேசம் ஊடகம் தனது முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுத்தி வருகிறது என்று குணாலன் மணியம் கூறினார்.
ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழு விருதுக்கான வேட்பாளர் பட்டியலை வாக்குகள் மூலம் தேர்வு செய்துள்ளது.
இந்த விருதளிப்பு விழா விமரிசையாக நடைபெற ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முழு ஆதரவு வழங்கி உள்ளார் என்று குணாளன் மணியம் தெரிவித்தார்.
தமிழ் நாட்டில் புகழ்பெற்ற பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் இந்த விருதளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
சந்தன கடத்தல் வீரப்பனை காட்டில் சந்தித்து பேட்டி எடுத்து அதை வெளியிட்ட பெருமை அவருக்கு இருக்கிறது.
இந்த தேசம் ஊடகத்தின் விருதளிப்பு விழாவில் அவருக்கும் விருது வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இதனிடையே தேசம் ஊடகத்தின் விருதளிப்பு விழா வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன் என்று மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் தெரிவித்தார்.
என்னை பத்திரிகையில் அறிமுகப்படுத்திய பெருமை குணாளன் மணியத்திற்கு இருக்கிறது.
அந்த வகையில் அவருக்கு எப்போதும் தமது ஆதரவு இருக்கும் என்று அவர் சொன்னார்.
தேசம் ஊடகத்தின் விருதளிப்பு விழா தொடர்ந்து வெற்றிகரமாக அமைய ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது ஆதரவை வழங்கி இருப்பதாக ம இகா தேசிய ஊடக பிரிவுத் தலைவர் சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

