மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் குடும்ப தின ஏற்பாட்டுக் குழுவினருக்கு வேட்டி – சேலைகளை அன்பளிப்பு செய்தார் சமூக சேவகன் டத்தோ டாக்டர் குணாஜி!

கோலாலம்பூர் ஜன 13-
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் குடும்ப தின விழா வரும் ஜனவரி 29 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் Dewan komunity koparasi polis மண்டபத்தில் நடைபெறுகிறது.

குடும்ப தின விழா ஏற்பாட்டுக் குழு தலைவராக மலேசிய நண்பன் துணை ஆசிரியர் மற்றும் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் உதவித் தலைவர் ஜீவா ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியல் பிரமுகர்கள், அரசு சார்பற்ற அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட சுமார் 350க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

DATO’ AMB. DR GUNAJI

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் குடும்ப தின விழா விமரிசையாக நடைபெற சமூக சேவகர்
DATO’ AMB. DR GUNAJI
தலைவர்
(PERTUBUHAN BORN TO SERVE MALAYSIA
CEO & FOUNDER
G MEDIA MALAYSIA) இன்று 20 வேட்டி மற்றும் 20 சேலைகளை அன்பளிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விழா ஏற்பாட்டுக் குழுவினர் அணிந்து கொள்ள இவர் இந்த வேட்டி சேலைகளை அன்பளிப்பு செய்துள்ளார்.

குடும்ப தின விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜீவா ராஜா தமது சார்பில் டத்தோ டாக்டர் குணாஜிக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles