
மா.பவளச்செல்வம்
கோலாலம்பூர் ஜன 13-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்
தனது எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிக்கும் மாமன்னரின் கூடுதல் உத்தரவு கடிதத்தை பதுக்கியது யார் என்று மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் இன்று ஆவேசமாக கேள்வியை எழுப்பினார்.
மாமன்னர் வழங்கிய கடிதம் ஒரு வருடம் ஆகிவிட்டது.
இந்த கடிதத்தை பதுக்கியது அல்லது மறைத்தது குறித்து அரச விசாரணை கமிஷனை அமைத்து பகிரங்கமாக விசாரணை நடத்த வேண்டும்.
அரசியல் சதுராட்டத்தில் டத்தோஸ்ரீ நஜிப்புக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது.

டத்தோஸ்ரீ நஜிப்புக்கு விடுதலை வேண்டும். இதைதான் நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் டத்தோஸ்ரீ நஜிப்புக்கு எதிராக தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
டத்தோஸ்ரீ நஜிப் வீட்டுக் காவலில் வைக்கப்பட வேண்டும் என்ற மாமன்னரின் கூடுதல் உத்தரவு கடிதத்தை மறைத்தது மிகப்பெரிய குற்றமாகும்.
இப்போது நாட்டு மக்களுக்கே உண்மை தெரிந்து விட்டது.
இனியும் அரசியல் நாடகம் நடத்தாமல் அவரை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆதரவாக மக்கள் சக்தி கட்சி உறுதுணையாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
இன்று டத்தாரான் மெர்டேக்கா சிலாங்கூர் கிளப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் சக்தி கட்சியின் முக்கிய தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

