நோய் நொடி நம்மை அண்டாமல்வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க வேண்டும்!-டாக்டர் சத்திய பிரகாஷ்

கோலாலம்பூர், ஜன.14-
இப்போது உள்ள சூழலில் உலக ரீதியில் சுகாதாரத்தில் அக்கறை செலுத்தி வரும் நிலையில், நம் இந்தியர்களும் சுகாதாரத்தில் கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருக்கவேண்டும் என பிகேஆரின் பொதுச் செயலாளரும் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் சத்திய பிரகாஷ் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இப்போது அதிகமான வைரஸ் நோய் பரவல் மக்களை தாக்கி வரும் நிலையில் அலட்சிய போக்கு நம் சுகாதாரத்தை பாதிக்கும் நாம் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் இந்த பொங்கல் திருநாளில் சுகாதரத்திற்கு நாம் முக்கியதுவம் கொடுத்து மகிழ்ச்சியோடு பொங்கலை கொண்டாடுவோம்.

நோய் நொடி நம்மை அண்டாமல் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க இந்த பொங்கலை வரவேற்போம் என டாக்டர் சத்திய பிரகாஷ் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles