
செய்தி / படங்கள் : எம். பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஜன 13-
தைப்பொங்கலை முன்னிட்டு மக்கள் சக்தி கட்சியின் ஏற்பாட்டில் வரும் ஜனவரி 18 ஆம் தேதி நெகிரி செம்பிலான் பகாவ் ஜெம்புல் மண்டபத்தில் தமிழர் திருநாள் பொங்கல் விழா மிகவும் விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவில் நடத்தப்படும் தைப்பொங்கல் விழாவில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்கிறார்கள்.
அனைவருக்கும் சுவையான உணவும் பரிமாறப்படும் என்று மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தெரிவித்தார்.
தைப்பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு உறி அடித்தல், கோளம் போடுதல், தோரணம் கட்டுதல் போன்ற பாரம்பரிய பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
தைப்பொங்கல் விழாவானது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பாரம்பரிய எழுச்சி விழாவாகும்.
அந்த வகையில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் ஏற்பாட்டில் ஜனவரி 18 இல் பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெறும் தைப்பொங்கல் விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள் என்று அவர் சொன்னார்.

