
ஸ்பெயின் கோபா டெல் ரெய் கிண்ண கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
சாந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற சுற்று 16 ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியினர் கெல்தா விகோ அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல் மாட்ரிட் அணியினர் 5-2 என்ற கோல் கணக்கில் கெல்தா விகோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணிக்காக எண்ட்ரிக் இரு கோல்களை அடித்தார்.
மற்ற கோல்களை கிளையன் எம்பாப்பே, வினிசியஸ் ஜூனியர், பெட்ரிகோ வால்வெர்ட் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணியினர் கோலா டெல் ரெய் கிண்ண கால்பந்து போட்டியின் காலியிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
மற்ற ஆட்டங்களில் ரியால் சோஷிடாட், ஓசாசுனா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

