
கோலாலம்பூர் ஜன 16-
டிக்டாக் தளத்தில் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை அனிமேஷன் வடிவத்தில் கேலி செய்யும் வீடியோ இந்துக்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ளது என்று மகிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் பேரவைத் தலைவர் டத்தோ கண்ணா சிவகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோ வைரலாகி வருவது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்தக் காணொளி எல்லைகளை மீறுகிறது. இன்றைய எ.ஐ.நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை செய்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு இயங்கும் செயலியாக, இது போன்ற உள்ளடக்கத்தை தானாகவே கட்டுப்படுத்துவதில் டிக்டோக் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஒரு சில சமூக ஊடக பயனர்கள் சிந்திக்காமல் செயல்படுகிறார்கள் .
முன்னதாக கோஷிஷ் லாமா என்ற பெயரைப் பயன்படுத்தி வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் டிக்டாக் வீடியோ வெளியிட்டது தொடர்பான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
முருகனின் உருவத்தை அசைவது போல் காட்ட செயற்கை நுண்ணறிவை கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காணொளி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் செயல் கண்டிக்கத்தக்கது.
பல்வேறு இனங்களின் மதங்கள், கலாச்சாரங்களை அவமரியாதை செய்யும் வகையில் இது அமைந்துள்ளது.
தகவல் தொடர்பு, பல்லூடக சட்டம் 1998 (சட்டம் 588) இன் கீழ் இணைய பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக உரிமத்தை அறிமுகப்படுத்திய தகவல் தொடர்பு அமைச்சு, இலக்கவியல் அமைச்சு மூலம் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பாராட்டுகள்.
இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

