
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் சௌத்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் சௌத்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக அதன் முன்னணி ஆட்டக்காரர் அமாட் ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் பிரிக்டோம் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் இப்ஸ்விச் டவுன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

