சீமான் அம்பியாக இருப்பார்… திடீரென அந்நியனாக மாறுவார்… பிரேமலதா கடும் தாக்கு

சென்னை ஜன 26-
பெரியார் குறித்து சீமான் சர்ச்சையாக பேசியது பற்றி கருத்து சொல்ல முடியாது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார்.

இதுபற்றி அவர் கிட்ட போய் தான் கேட்கனும். சீமான் அம்பியாகவும் இருப்பார்…திடீரென்று அந்நியனாகவும் மாறுவார்… அதனால் அவரை கணக்கில் எடுத்து கொள்ள கூடாது என்று ஏற்கனவே நான் கூறியுள்ளேன்.

இறந்து போன தலைவர்களை பற்றி நாம் யாரும் பேசக்கூடாது. அவர்கள் வாழ்ந்து சரித்திரம் படைத்து விட்டு சென்று விட்டனர்.

இருக்கிறவர்களை பற்றியும், இருக்கும் அரசியல் பற்றியும் பேசுவதை விட்டுவிட்டு இறந்தவர்களை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று நான் பலமுறை கண்டித்துள்ளேன்.

அதில் எனக்கு எந்த உடன்பாடும் கிடையாது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles