
கூலாய், பிப் 15-
தித்திக்கும் தைப்பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு ஜொகூர் கூலாய் பண்டார் புத்ரா ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் தைப்பொங்கல் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
ஜொகூர் கூலாய் பண்டார் புத்ரா கலை பண்பாட்டு இயக்கம் மற்றும் பண்டார் புத்ரா தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் சார்பில் சுரேந்திரன் பலராமன் கலந்து சிறப்பித்தார்.
விழா ஏற்பாட்டுக் குழுவினர் இவருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தனர். தமிழர்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் விழாவை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக ஏற்பாடு செய்து வரும் இந்த இயக்கத்தின் சேவைகளை சுரேந்திரன் வெகுவாக பராட்டினார்.

