
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வெற்றி பெற்றனர்.
எதிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணிக்காக ஒமார் மார்மோஸ் ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.
மற்றொரு கோலை ஜேம்ஸ் மேக்அதே அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் எவர்ட்டன் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் ஏஎப்சி போர்னமௌத், புல்ஹாம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

