
இந்த சோளம் இந்தியர்களுக்கு விற்கப்படாது என்ற வீடியோ பதிவு தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
சிப்பாங் கோத்தா வாரிசானில் ஒரு மலாய் பெண் குடும்பம் சோளத்தை விற்பனை செய்து வருகிறது.
அப் பெண் கடைக்கு முன் ஓர் அறிவிப்பை போட்டிருந்தார்.
அதில் மன்னித்து விடுங்கள். இந்த சோளம் கெல்லிங்கிற்கு விற்கப்படாது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது இந்திய சமுதாயத்தை நேரடியாக இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது.
சம்பந்தப்பட்ட வியபாரியின் செயலை பெண் ஒருவர் சுட்டிக் காட்டுகிறார்.
சம்பந்தப்பட்ட வீடியோ பதிவு தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

