
சிரம்பான் ஜூலை 29-
இந்திய சமுதாயத்தின் நலம் கருதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு 115 கோடியே 30 லட்சம் வெள்ளியை (Rm 1.1531 billion) வாரி வழங்கி இருக்கிறார்.
கல்வி, கோவில், சிறுதொழில், பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் இந்திய சமுதாயத்திற்கு அவர் பேருதவி செய்திருக்கிறார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு போதும் இந்திய சமுதாயத்தை கைவிடவில்லை.
இனம் நிறம் மதம் பார்க்காமல் அனைத்து இன மக்களுக்கும் சிறப்பான முறையில் உதவிகளை வழங்கி இருக்கிறார்.இந்திய சமுதாயத்தையும் அவர் கைவிட வில்லை
இந்நிலையில்
நெகிரி செம்பிலான் மாநில இந்தியர்கள் பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்கும்படி கெஅடிலான் தேசிய உச்சமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சிவமலர் கேட்டுக் கொண்டார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தை ஆட்சி புரியும் பக்கத்தான் ஹராப்பான் அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் சிறப்பான சேவையை வழங்கி இருக்கிறது.
இந்திய சமுதாயத்தின் தேவைகளை அறிந்து மிகப்பெரிய அளவில் மானியம் வழங்கி இருக்கிறது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் ஆட்சி தொடர்ந்து நிலைத்திருக்க இந்தியர்கள் திரண்டு வந்து வாக்களிக்கும்படி சிவமலர் கேட்டுக் கொண்டார்.

