
சிரம்பான் ஜூலை 29
மாண்புமிகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு, இந்திய சமூகத்திற்கு வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கவில்லை; மாறாக, பல்வேறு கொள்கைகள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் மூலம் நேரடியாக மக்களின் வாழ்க்கையில் பயன் அளித்து தனது உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல், இந்திய சமூகத்தின் கல்வி, சமூக மேம்பாடு, பொருளாதாரம், மொழி, கலாசாரம் மற்றும் நலனை வலுப்படுத்துவதற்காக மடானி அரசு RM597.5 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.
அதன் முக்கிய சாதனைகள்:
- இந்திய சமூகத்தின் கல்வி, தொழில்முனைவோர் வளர்ச்சி மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்காக MITRA-விற்கு RM450 மில்லியன்
- இந்திய சமூக கல்வி நிறுவனங்களுக்கு உதவ MIED-க்கு RM101 மில்லியன்.
- நாடு முழுவதும் உள்ள 344 இந்து ஆலயங்களின் பராமரிப்பு மற்றும் கட்டுமானத்திற்காக வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு (KPKT) RM46.5 மில்லியன்.
கல்வித் துறைக்கான ஒதுக்கீடுகள்
இந்திய சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதற்காக மேலும் RM182 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அவை:
- 6 தமிழ்ப்பள்ளிகளுக்கு புதிய கட்டிடத் தொகுதிகள் அமைக்க RM30 மில்லியன்.
- 2023 முதல் 2026 வரை தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்பிற்கு RM130 மில்லியன்.
- TAFE கல்லூரிக்கு 2026 ஆம் ஆண்டில் RM22 மில்லியன், 2024 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட RM2 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 10 மடங்குக்கும் அதிகமான உயர்வு.
சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம்
கல்வியைத் தவிர, அரசு:
- சமூக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும், தகன மையங்கள் அமைப்பதற்கும் RM20 மில்லியன்.
- தமிழ் மொழியை வலுப்படுத்துவதற்காக தமிழ் மாநாடு, மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி துறை, பள்ளிகளுக்கான தமிழ் கற்பித்தல் மற்றும் கற்றல் வளங்களை மேம்படுத்த RM5 மில்லியன் ஒதுக்கியுள்ளது.
பொருளாதார துறையில், பல்வேறு நிதி உதவித் திட்டங்கள் மூலம் RM555.6 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது:
- PENN (AIM) – RM100 மில்லியன்
- SPUMI (TEKUN) – RM271.6 மில்லியன்
- BRIEF-i (Bank Rakyat) – RM100 மில்லியன்
- SME Bank – RM50 மில்லியன்
- Misi VETI MADANI – RM34 மில்லியன்
இந்திய சமூக மேம்பாட்டிற்கான RM597.5 மில்லியனும், பொருளாதார நிதி உதவிக்கான RM555.6 மில்லியனும் சேர்த்து இதுவரை
இந்திய சமூகத்திற்கு வழங்கப்பட்ட மொத்த தொகை RM1.1531 பில்லியன் ஆகும்.
இது, தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குறுதிகளை வழங்கும் அரசல்ல மடானி அரசு; மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் கொள்கைகளை செயல்படுத்திய அரசாகும் என்பதை நிரூபிக்கிறது.
மேலும், STR, SARA, BUDI MADANI, குறைந்தபட்ச ஊதிய உயர்வு, பள்ளி உதவித் தொகைகள் மற்றும் இன வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களும் இந்திய சமூகத்திற்கு பயனளித்து வருகின்றன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பயன்
மதானி அரசின் நிர்வாகத்தில் நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்ததன் பயனையும் இந்திய சமூகம் அனுபவித்து வருகிறது.
- ரிங்கிட் மதிப்பு RM3.88 வரை வலுவடைந்துள்ளது.
- வேலைவாய்ப்பின்மை விகிதம் 2023 இல் 3.4% இருந்து 2025 இல் 2.9% ஆக குறைந்துள்ளது.
- மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 3.6% இலிருந்து 5.2% ஆக உயர்ந்துள்ளது.
- முதலீட்டு மதிப்பு RM329.5 பில்லியனிலிருந்து RM426.7 பில்லியன் வரை உயர்ந்துள்ளது.
இதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகி, முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்திய சமூகத்திற்கும் பயனளித்துள்ளது.
ஆகவே மலேசிய இந்தியர்களே குறிப்பாக நெகிரி செம்பிலான் மாநில இந்தியர்களே
வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு, நெகிரி செம்பிலான் மக்களுக்கும், குறிப்பாக இந்திய சமூகத்தினருக்கும், அரசியல் முழக்கங்களை அல்ல; சாதனைப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு தங்கள் வாக்கை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உங்கள் வாக்கே இந்த வளர்ச்சி தொடருமா அல்லது நிறுத்தப்படுமா என்பதை தீர்மானிக்கும்.
எனவே, டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூன் தலைமையில் நெகிரி செம்பிலானில் மடானி அரசு மற்றும் பக்காத்தான் ஹராப்பானுக்கு மீண்டும் மக்கள் ஆணை வழங்கி, இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சமூக முன்னேற்றம், தமிழ் மொழி மற்றும் கலாசாரப் பாதுகாப்பு ஆகிய முயற்சிகள் எதிர்கால தலைமுறைக்காக தொடர வழிவகுப்போம் என்று
மாண்புமிகு குணராஜ் ஜார்ஜ்
(செந்தோசா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்
மக்கள் நீதி கட்சி (KEADILAN) மத்திய தலைமைக்குழு உறுப்பினர்) மற்றும்
திருமதி சிவமலர் கணபதி
(துணைப் பொதுச் செயலாளர் –
மக்கள் நீதி கட்சி (KEADILAN) மத்திய தலைமைக்குழு உறுப்பினர்) ஆகியோர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

